விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த புத்தனந்தல் கிராமத்தையொட்டி உள்ள கெடிலம் ஆற்றில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு நீர் பாசனத்திற்காக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது புத்தனந்தல் அணை.
இந்த அணை கட்டி 50 ஆண்டுகள் கடந்ததால், தடுப்பணை முற்றிலும் பழுதடைந்து, அதில் இருந்த செட்டர்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதால் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. பழுதடைந்த நிலையில் இருந்த அணைக்கட்டை சீரமைக்கக் கோரி, விவசாயிகளுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து போராடி வந்த நிலையில், புத்தனந்தல் அணையிலிருந்து விவசாய நிலங்களுக்குத் செல்லுகின்ற 16 கிலோமீட்டர் வாய்க்கால்களையும் சீரமைக்க ரூ. 60 லட்சம் நிதியை கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு ஒதுக்கியது.