விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். பட்டதாரியான இவர், காந்தி சிலை அருகே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ராம் பிராய்லர் என்ற பெயரில் கோழிக்கறி கடை நடத்திவருகிறார்.
இந்நிலையில், தற்போது அதிகரித்துவரும் கரோனா பரவலால் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்பதை உணர்ந்த இவர், தனது கடைக்கு கோழிக்கறி வாங்கவரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், இலவசமாக மாஸ்க் வழங்கிவருகிறார்.