தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திட்டமிட்டப்படி பொதுத்தேர்வுகள் நடைபெறும்'- பள்ளி கல்வித்துறை அமைச்சர் - தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர்

பொதுத்தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர்
பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

By

Published : Jan 5, 2022, 7:14 PM IST

விழுப்புரம்:நேற்று (ஜனவரி 4) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருப்பதாவது,

“தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கான பாடத் திட்டத்திலிருந்து முன்னரே அறிவித்தபடி 30 முதல் 55 விழுக்காடு வரை பாடச்சுமை குறைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பொதுத் தேர்வுகள் நடைபெறும்.

பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இல்லம் தேடி கல்வித் திட்டம் அனைவரது மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தேவைக்கு அதிகமான அளவில் தன்னார்வலர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பான சம்பவம் மன வருத்தம் அளிக்கக்கூடியது. இது போன்ற நிகழ்வு நிகழாமலிருக்க, பழைய பள்ளிக் கட்டடங்களைக் கணக்கெடுத்து, அவற்றை இடிக்கும் பணி குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் வேதா இல்லம் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details