இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்துள்ள படம் 'சைக்கோ'. இந்த திரைப்படம் இன்று (ஜனவரி 24) வெளியாகியுள்ளது.
சைக்கோ படம் பார்த்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் இந்நிலையில், விழுப்புரத்தில் இப்படம் வெளியானது. இதன் முதல் காட்சியை மாற்றுத்திறனாளி - ஆதரவற்ற பள்ளி மாணவர்கள் காண்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனை விழுப்புர மாவட்ட உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் பிரேம், செயலாளர் சங்கர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். படம் பார்த்த மாணவர்கள் கூறுகையில், ’இப்படத்தில் மாற்று திறனாளியாக நடித்திருந்த உதயநிதியை பார்க்கும்போது மாற்றுதிறனாளியால் எல்லாம் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது.. மாற்றுதிறனாளியால் மாற்றத்தை கொண்டு வர முடியும் என நம்பிக்கையையும் அளித்திருக்கிறது’ என்றனர்.
இதையும் வாசிங்க: முதலமைச்சரை நேரில் சந்தித்த 1 கோடி ரூபாய் வின்னர்!