விழுப்புரம் அருகிலுள்ள சூரப்பட்டு பகுதியில் இயங்கி வரும் சகுந்தலா மருந்தகத்தில் உரிய அனுமதியின்றி, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த சுகாதாரத்துறை இணை இயக்குனர் சுகந்தி தலைமையிலான குழுவினர், சகுந்தலா மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
போலி மருத்துவர்கள் கைது! சுகாதாரத்துறை அதிரடி - health department
விழுப்புரம்: சூரப்பட்டு பகுதியில் 8ஆம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்கள் இருவரை, காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது சிவநேசன் என்பவர் மருந்தகம் நடத்திக்கொண்டே அப்பகுதி மக்களுக்கு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. மேலும் அதே பகுதியில் டெல்பினா என்பவர் 8ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு மருந்தகம் நடத்திக்கொண்டே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக கடையில் இருந்த மருத்து, மாத்திரைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த சுகாதாரத்துறை குழுவினர், சிவநேசன், டெல்பினா ஆகிய இருவரையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின் இரண்டு மருந்தகங்களுக்கும் சீல் வைக்கபட்டது. இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த கெடார் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே நேரத்தில் இரண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சூரப்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.