தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள் முழங்கிய கோரிக்கைகள்:
- எட்டாவது ஊதியக் குழு நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும்.
- புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
- மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான சலுகைகளை வழங்கிட வேண்டும்.
- பொது விநியோகத் திட்டத்துக்கென தனித் துறையை உருவாக்க வேண்டும்.
- டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
- அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக உடனடியாக நிரப்பிட வேண்டும்.
- பணி நியமனம், பணியிட மாறுதல், பதவி உயர்வு ஆகியவற்றில் உள்ள முறைகேடுகளைக் களைய வேண்டும்