கள்ளக்குறிச்சி அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் குடிநீர் வழங்கவில்லை எனவும் இதனால் உணவுகளை உணவகங்களில் வாங்கிவந்து சாப்பிடும் நிலை ஏற்படுவதாகவும், குடிநீர் உட்பட அனைத்தும் கடையில் வாங்கி பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
குடிநீர் சிக்கல்: பொதுமக்கள் சாலை மறியல் - தண்ணீர் பிரச்னை
விழுப்புரம்: குடிநீர் சிக்கல் காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் பிரச்னை
மேலும் பள்ளிகள் திறந்துள்ளதால் பொதுமக்கள் தண்ணீரின்றி அவதிப்படுவதாகவும் புகார் அளிக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைத்தனர. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.