விழுப்புரம் மாவட்டம் மஞ்சு நகர் பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நல்லசிவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனால் அவர் அப்பகுதி காவல்துறைக்கு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்படி சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அந்தச் சோதனையில் மஞ்சு நகரில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்றுவருவது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த வீட்டிலிருந்த இரு பெண்கள் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.