ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (நவ.06) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ., "தமிழ்நாட்டில் தேவையான அளவு உரம், விதைகள் கையிருப்பு உள்ளது. விவசாயிகளுக்கு 5,398 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்துப் பொருள்களும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் இணைப்பு பொருள்களை வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்தும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.