விழுப்புரம்:விக்கிரவாண்டி - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ளது பஞ்சமாதேவி கிராமம். இந்த கிராமத்தில் இன்று காலை திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் வழியாக நெய்வேலி சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திண்டிவனத்தில் இருந்து பண்ருட்டி, கடலூர் வழியாக நெய்வேலி செல்லக்கூடிய தனியார் பேருந்தை திண்டிவனம் சித்தனி பகுதியை சேர்ந்த சபரிநாதன் என்பவர் இன்று காலை ஓட்டிச் சென்று உள்ளார், விழுப்புரம் -கும்பகோணம் சாலை பஞ்சமாதேவி என்ற பகுதியின் அருகே உள்ள வளைவில் இருசக்கர வாகனத்தை முந்த முயன்ற போது, தனியார் பேருந்து கட்டுப்பாட்டு இழந்து உள்ளது.
பேருந்து ஓட்டுனர் சபரிநாதன் பிரேக் அடிக்க முற்பட்டபோது பிரேக் பிடிக்க முடியாமல் சாலையோரம் இருந்த வளைவில் நிலை தடுமாறி கவிழ்ந்தது, இதில் பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர், பேருந்து நிறுத்தத்தில் நின்று விட்டு, சிறிது தூரத்தில் குறைந்த வேகத்தில் சென்ற நிலையில் பேருந்து கவிழ்ந்ததால் பெரும் அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது.