விழுப்புரம்: கிசான் மோசடி வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் போலி விவசாயிகள் என கண்டறியப்பட்டு சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள நெகனூர் கிராமத்தைச் சேர்ந்த தனியார் இ-சேவை மையம் நடத்தி வந்த ராஜி என்கிற லோகநாதன் (38) என்பவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
இவர் பல போலி பயனாளிகளின் ஆவணங்களை பதிவேற்றம் செய்தது சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தையடுத்து கைது செய்துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் இரண்டு அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 10 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை மாவட்டத்தில் ரூ.12 கோடி பணம் போலி பயனாளிகளிடம் இருந்து அரசு மீட்டுள்ளது.
இதையும் படிங்க: கிசான் திட்ட போலி விவசாயிகள்- விரட்டும் சிபிசிஐடி !