அமைச்சர் சி.வி. சண்முகம் மீது க. பொன்முடி குற்றச்சாட்டு! - Tamilnadu assembly election 2021
விழுப்புரம்: மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் அமைச்சர் சி.வி. சண்முகம் முடிச்சுப் போடுகிறார் என திமுக துணைப் பொதுச்செயலாளர் க. பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொன்முடி
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று (நவம்பர் 18) செய்தியாளர்களைச் சந்தித்த க. பொன்முடி,"மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் அமைச்சர் சி.வி. சண்முகம் முடிச்சுப் போடுகிறார். அதிமுகவினர் டெண்டர் எடுத்தது அரசு நிலம். அதில் எம்எல்ஏ மகன் கலந்துகொண்டது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. அதிமுகவில் இருக்கும் உள்ட்கட்சிப் பூசலை மறைக்கவே, அவர்கள் திமுகவில் உள்கட்சி பூசல் இருப்பதாக கூறுகின்றனர். திமுக எப்போதும் தலைமைக்கு கட்டுப்பட்ட இயக்கம்.
அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிதான் வெற்றிபெறும். அடுத்த முதலமைச்சராக மு.க. ஸ்டாலின்தான் பொறுப்பேற்பார். மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு வருகை வழக்கமான ஒன்றுதான்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதிமுகவினர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கே டெண்டர் கொடுத்துவருகின்றனர்" என்றார்.