கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி நகரின் சந்தைப் பகுதிகள் மற்றும் தெருவோரக் கடைகளில் குவிந்ததால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
களைக்கட்டிய பொங்கல் திருவிழா - சூடுபிடித்த விற்பனை! - கள்ளக்குறிச்சி பொங்கல் சந்தை
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டையில் பொங்கல் திருநாளையொட்டி சந்தைகள் களைக்கட்டியதால் விற்பனை சூடுபிடித்தள்ளது.
புத்தாடைகள் மற்றும் பொங்கலுக்குத் தேவையான கரும்பு, மஞ்சள் கிழங்கு, அரிசி, வெல்லம், பானைகள் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை அப்பகுதியில் களைகட்டியது. மேலும் வரவிருக்கும் மாட்டுப் பொங்கலையொட்டி, மாடுகளுக்குத் தேவையான புது கயிறுகள், மாடுகளின் கொம்புகளுக்குத் தேவையான வண்ணங்கள் போன்ற பொருட்களை வாங்குவதற்கு சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் குவிந்தனர். இதனால் உளுந்தூர்பேட்டையில் விற்பனை சூடுபிடித்துள்ளது.
இதையும் படிங்க: காவல் உதவி ஆய்வாளர் உறவினர் வீட்டில் கொள்ளை!