உளுந்தூர்பேட்டையைச் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உளுந்தூர்பேட்டை நகரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்குத் தேவையான புத்தாடைகளையும் பொங்கல் வைப்பதற்குத் தேவையான கரும்பு, மஞ்சள்கிழங்கு, அரிசி, வெல்லம், பானைகள் உள்ளிட்ட பொருள்களை இன்று ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
மேலும் மாட்டுப் பொங்கலுக்கு தேவையான புதுகயிறுகள், மாடுகளுக்கு பூசவேண்டிய வர்ணங்கள் போன்ற பொருள்களை வாங்குவதற்கும் கிராமத்திலிருந்து அதிக மக்கள் உளுந்தூர்பேட்டைக்கு வந்திருந்தனர். இதனால், உளுந்தூர்பேட்டையில் வியாபாரம் விறுவிறுப்புடன் நடைபெற்றது.
உளுந்தூர் பேட்டை கடை வீதிகளில் குவிந்த மக்கள் கிராம மக்கள் அதிகமானோர் நகரத்திற்கு வருகை தந்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. முன்னதாக சரியான திட்டமிடுதலுடன் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் போக்குவரத்து நெரிசலை சிறப்பாக சரி செய்தனர்.
நாகை கடை வீதிகளில் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்கு குவிந்த மக்கள் இதேபோல் நாகப்பட்டினம் பெரியகடைத் தெரு, பாரதி மார்க்கெட், பரவை மார்க்கெட் உள்ளிட்ட கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக வருகை தந்து பொங்கலுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்