தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

' காவல் துறை தேர்வுக்கான தேதி மாற்றம்' - விழுப்புரம் எஸ்.பி. விளக்கம் - Change of date for police written sub inspector examination

விழுப்புரம்: ஜனவரி 11ஆம் தேதி நடைபெறவிருந்த சார்பு / உதவி ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 13ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு ஒத்திவைப்பு, காவல்துறை தேர்வுக்கான தேதேர்வு ஒத்திவைப்பு  காவல்துறை தேர்வுக்கான தேதி மாற்றம்  Change of date for police written sub inspector examination  sub inspector examination postponed
காவல்துறை தேர்வுக்கான தேதி மாற்றம்

By

Published : Jan 8, 2020, 5:35 PM IST

ஜனவரி 11ஆம் தேதி நடைபெறவிருந்த சார்பு / உதவி ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 13ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.,

"தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 2019ஆம் ஆண்டுக்கான சார்பு / உதவி ஆய்வாளர்கள் பதவிகளுக்கு துறை ரீதியான விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 11ஆம் தேதியன்று நடைபெற இருந்தது. ஆனால், நிர்வாகக் காரணங்களால் மேற்கண்ட எழுத்துத் தேர்வு ஜனவரி 13ஆம் தேதியன்று (திங்கட்கிழமை) அதே தேர்வு மையத்தில், அதே குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறவுள்ளது.

'தண்ணீர்.. தண்ணீர்..!' ஐந்தே நாட்களில் பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டு வீழ்த்த ஆஸி., இலக்கு!

மேலும், அனைத்து துறைரீதியான விண்ணப்பதாரர்களும் மேற்படி எழுத்துத் தேர்வுக்குரிய மாற்றம் செய்யப்பட்ட அழைப்புக் கடிதத்தினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் குழும இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல் துறை தேர்வுக்கான தேதி மாற்றம்! எஸ்.பி.அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details