விழுப்புரத்தை அடுத்துள்ள மாம்பழப்பட்டு ரயில்வே கேட் பகுதியில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ரேவதி தலைமையிலான காவலர்கள் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூன்று பேரைப் பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த காவலர்கள், அவர்களிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் மூவரில் ஒருவர் புதுச்சேரியைச் சேர்ந்த நடராஜன் என்பதும் இருவர் விழுப்புரத்தைச் சேர்ந்த துரைராஜ், அஜித்குமார் என்பதும் தெரியவந்தது. மேலும் மூவரும் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.