விழுப்புரம் மாவட்டம் சாலையாம்பாளையம் பகுதியில் எரிசாராயம் விற்பனை செய்வதாக மாவட்ட மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் ரேணுகாதேவிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
விழுப்புரம் அருகே 95 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் - விழுப்புரம் மாவட்ட செய்திகள்
விழுப்புரம்: சாலையாம்பாளையம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 95 லிட்டர் எரிசாராயத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
எரிசாராயம்
இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர் . அப்போது வீரன் கோயில் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 95 லிட்டர் எரிசாராயம் பிடிபட்டது.
இதையடுத்து, அங்கிருந்த எரிசாராயத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஆண்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரை தேடி வருகின்றனர்.
Last Updated : Aug 15, 2020, 4:36 PM IST