தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 13, 2020, 11:07 PM IST

ETV Bharat / state

உதவி ஆய்வாளர் எழுத்து தேர்வில் 'பிட்' அடித்து பிடிபட்ட காவலர்

விழுப்புரம் :உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் பிட் அடித்து பிடிபட்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

உதவி ஆய்வாளர் எழுத்து தேர்வில் 'பிட்' அடித்த காவலர்  police mal practice in si exam  பிட் அடித்த விழுப்புரம் காவலர்கள்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்
உதவி ஆய்வாளர் எழுத்து தேர்வில் 'பிட்' அடித்து பிடிபட்ட காவலர்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்நிலையில், இன்று விழுப்புரம் தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கான எழுத்து தேர்வில் மொத்தம் 810 பேர் பங்கேற்றிருந்தனர்.

இதனை ஐ.ஜி.கணேசமூர்த்தி மற்றும் எஸ்.பி. ஜெயக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரியும் மணி என்பவர் தனது உள்ளாடைக்குள் மறைத்து கொண்டுவந்திருந்த பிட்டை எடுத்து எழுதியுள்ளார்.

இதனை தேர்வு அறையில் மேற்பார்வையாளர் பணியில் இருந்தவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்ட காவலர் மணி உடனடியாக தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குடியுரிமைத் திருத்த சட்டம் வேண்டும் - ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் வழக்கறிஞர்கள்

ABOUT THE AUTHOR

...view details