விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து சிலர் சாராயம் காய்ச்சிவருவதாக விழுப்புரம் மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளர் ரேணுகா தேவி, உதவி ஆய்வாளர் வீரசேகரன் ஆகியோர் தலைமையிலான காவலர்கள் நேற்று அதிகாலையில் அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மூன்று இருசக்கர வாகனங்களில் 50 கிலோ கொள்ளளவு கொண்ட 5 வெல்ல மூட்டைகளுடன் வந்தவர்களை மடக்கிப் பிடித்தனர்.
சாராயம் காய்ச்ச வெல்ல மூட்டைகளுடன் வந்த ஒருவர் கைது
விழுப்புரம்: அரகண்டநல்லூர் அருகே சாராயம் காய்ச்சுவதற்காக வெல்ல மூட்டைகளுடன் வந்த ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
Police arrest a man who came with bundles of jaggery near Arakandanallur
வாகனத்தில் வந்தவர்களில் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த பாரதிகுமார் என்பவரை மட்டும் பிடித்து காவலர்கள் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய சரத், அய்யப்பன், விஜயகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:150 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிப்பு: குற்றவாளிக்கு வலைவீச்சு!