தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்.18 ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் விழுப்புரம் மக்களவை தொகுதியின் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் இன்று தனது வேட்புமனுவை, விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சுப்பிரமணியனிடம் தாக்கல் செய்தார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் - பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன்
விழுப்புரம்: விழுப்புரம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அவருடன் லட்சுமணன் நாடாளுமன்ற உறுப்பினர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்., 'பாமக சார்பில் போட்டியிடும் என்னை வெற்றிபெறச் செய்தால் தனிப்பட்ட விழுப்புரம் மக்களவை தொகுதிக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தின் நலனுக்காகவும் பாடுபடுவேன்' என்றார்.
மேலும் மாவட்டத்தில் கல்வி, வேளாண்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுவேன் என்றும் தெரிவித்தார். முன்னதாக விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அதிமுக, தேமுதிக, பாமக கூட்டணி கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். இதனால் பலத்த காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்