வன்னியர்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி விழுப்புரம் முன்னாள் எம்பி கோ. தன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது காவல் துறையின் கட்டுப்பாட்டை மீறி பாமக தொண்டர்கள் விழுப்புரம் புதுவை நெடுஞ்சாலையின் குறுக்கே வந்து மறியலில் ஈடுபட முயன்றதால் காவல் துறை, கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் நகர்ப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டதுடன், விழுப்புரம் புதுவை சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஸ்மார்ட் வண்டி கடைகளுக்கு 16 ஆயிரம் பேர் விண்ணப்பம்: சென்னை மாநகராட்சி