விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே கடன் தொல்லையால் 5 பேர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தற்கொலை செய்து இறந்தோருக்கு தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.
அதில், " விழுப்புரம் மாவட்டம் புதுப்பாளையத்தில் கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்று விட்டு, தாயும், தந்தையும் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.