விழுப்புரம்: வானூர் அருகே நாவற்குளம் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் '2022ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம் 2023ஆம் ஆண்டை வரவேற்போம்' என்ற தலைப்பில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார்.
இந்த பொதுக்குழுவில் மறைந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து கட்சியின் வளர்ச்சி குறித்தும், நிர்வாகிகளின் உழைப்பு சம்பந்தமாகவும் ராமதாஸ் இயற்றிய ஆத்திசூடியை அறிமுகப்படுத்தினார்.
1.2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். உச்ச நீதிமன்ற ஆணைக்கிணங்க இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.
2.ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஆளுநர் இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 80 சதவீத வேலை வாய்ப்பு தமிழர்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு துறையில் உள்ள 4 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும்
3.ஒரு லட்சம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கி, தமிழ்நாட்டில் நீர் பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் உள்ளது. அதன்படி ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழித்து போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்.