விழுப்புரம்: விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த நவம்பர் 28ஆம் தேதி காலை விழுப்புரம் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மழை காரணமாக அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்டக் கூட்டம் வரும் 14.12.2021 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு விழுப்புரத்தில் சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ஆனந்தா திருமண அரங்கில் நடைபெறும் என்று தலைமைக் கழகத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.