விழுப்புரம் முத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரவி. கொத்தனார் வேலை செய்து வரும் இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் பொறுப்பு வகித்து வருகிறார். இந்தச் சூழலில் இன்று (ஜன. 30) அவர் வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து கொண்டிருந்துபோது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ரவியை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து ரவியை மருத்துமனையில் அனுமதிக்கச் சென்றனர். அப்போது ரவி வழியிலேயே உயிரிழந்துள்ளார். பட்டப் பகலிலேயே பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நடைபெற்ற இந்தக் கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.