விழுப்புரம்:செஞ்சி அருகே வடபட்டி கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் என்பவரின் மகள் சத்தியவதி தேவனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தான் மூன்று பாடங்களில் தோல்வி அடைந்ததை அறிந்து நேற்று (ஜூன்20) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல தேவனுரை சேர்ந்த பரமேஸ்வரி என்ற மாணவி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தான் தேர்ச்சியடையாததை அறிந்து மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மேல் சிகிச்சைக்காக சேத்துபட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.