விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் உள்ள கம்பன் நகரில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் நிலையம் செயல்பட்டுவருகிறது. இங்கு கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சீனுவாசன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக மேலாளராகப் பணியாற்றிவருகிறார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் சீனுவாசன் பணியில் இருந்துள்ளார். அப்போது பெட்ரோல் நிலையத்துக்கு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்களில் ஒருவர் நேராக மேலாளர் சீனுவாசனின் அறைக்குச் சென்று, இரண்டு வெடிகுண்டுகளை வீசி கொலைசெய்ய முயன்றுள்ளார்.
ஆனால், வெடிகுண்டுகள் வெடிக்காமல் போகவே, தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் சீனுவாசனை சராமரியாக வெட்டி கொலை செய்துவிட்டு காரில் தப்பிச்சென்றுள்ளனர்.