விழுப்புரம் அருகேயுள்ளது பனங்குப்பம் கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்தப் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாகவும், மேலும் எண்ணெய் கலந்த நிலையில் குடிப்பதற்குத் தகுந்த முறையில் இல்லை எனவும் கூறி அப்பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று (நவ. 02) விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
விழுப்புரம் அருகே துர்நாற்றம் வீசும் குடிநீர்: ஆட்சியரிடம் மனு அளித்த இளைஞர்கள்! - குடிநீர் பிரச்னை
விழுப்புரம்: பனங்குப்பம் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
துர்நாற்றம் வீசும் குடிநீர்
மேலும் தங்கள் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக மாற்று இடத்தில் குடிநீர் வசதி செய்துதர வேண்டும் என்றும், தங்களது பகுதியில் பொது கழிப்பறை, நியாயவிலைக் கடை, அங்கன்வாடி மையம் போன்ற வசதிகள் செய்துதர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: கரோனா காலத்தில் மதுசோதனைக்கான மூச்சுப்பகுப்பாய்வு சோதனை? ஒரு களஆய்வு