விழுப்புரம் அருகேயுள்ள கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஓட்டலில் தங்கி பணிபுரிந்துவந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு, புஷ்பராஜ் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அவரின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கு காலம் தாமதமாகியுள்ளது.