தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக குறித்து பொய்யான தகவல் வெளியிட்ட பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு - விழுப்புரம் மாவட்ட செய்திகள்

விழுப்புரம் : திமுக குறித்து பொய்யான தகவல் வெளியிட்ட பத்திரிகை நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக குறித்து பொய்யான தகவல் தெரிவித்த பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
திமுக குறித்து பொய்யான தகவல் தெரிவித்த பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

By

Published : Aug 28, 2020, 8:12 PM IST

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட திமுக துணைச் செயலாளராக இருந்து வரும் அசோகன், இன்று (ஆக. 28) விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தமிழ்நாட்டில் வெளியாகி வரும் இதழ் ஒன்றில், 'பிளவுபடும் திமுக : பின்னணியில் பாஜக' என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதாகவும், இச்செய்தி உள்நோக்கத்துடனும், விஷமத்தனமாகவும், புரளியை அச்சிட்டு பொது மக்களுக்கு தேவையற்ற எச்சரிக்கை விடுப்பது போலவும், இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களிடையே விரோதத்தை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது போலவும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், பொய்யானத் தகவலை பிரசுரித்த பத்திரிகை நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என்றும், செய்தி வெளியிட்டவர், பத்திரிக்கை ஆசிரியர் உள்ளிட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details