தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மது கடத்தலில் ஈடுபட்ட நபர் தப்பி ஓட்டம் - போலீஸ் தேடுதல் வேட்டை - alcohol_seized

விழுப்புரம்: திண்டிவனம் அருகே புதுச்சேரியிலிருந்து கடத்திவரப்பட்ட சுமார் 1,200 மதுபாட்டில்களைக் கைப்பற்றிய மதுவிலக்கு அமலாக்கத் துறை காவல் துறையினர், தப்பியோடிய வாகன ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

person-who-fled-the-scene-of-a-drug-trafficking-escape-police-search
person-who-fled-the-scene-of-a-drug-trafficking-escape-police-search

By

Published : Feb 21, 2020, 9:11 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் புதுச்சேரியிலிருந்து அதிகளவில் மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு வருவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர், திண்டிவனம் மேம்பாலப் பகுதியில் தீவிர வகானத் தணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அப்போது புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்த வாகனத்தை காவல் துறையினர் நிறுத்திய போது, அந்த வாகனத்தின் ஓட்டுநர் வண்டியிலிருந்து இறங்கி தப்பி ஓடியுள்ளார். இதனால் சாந்தேகமடைந்த காவல் துறையினர் வாகனத்தை சோதனையிட்டபோது அதில் 25 பெட்டிகளில், சுமார் 1,200 மதுபாட்டில்கள் புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மதுபாட்டில்களைக் கைப்பற்றிய காவல் துறையினர், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்ததோடு, தப்பி ஓடிய ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை

ABOUT THE AUTHOR

...view details