விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள கடப்பேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (32). இவர் தொடர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது வானூர் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது! - Villupuram Latest News
விழுப்புரம் : வானூர் அருகே தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
![தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது! Person involved in serial crimes arrested under Kundas act](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:20:09:1600354209-tn-vpm-03-kundas-act-scr-7205809-17092020201608-1709f-1600353968-763.jpg)
Person involved in serial crimes arrested under Kundas act
எனவே இவர் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பரிந்துரையை ஏற்று தண்டபாணியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டார்.
அதன்பேரில் இன்று (செப்.17) குண்டர் சட்டத்தின் கீழ் தண்டபாணியை கைது செய்த காவல்துறையினர் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.