தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 19, 2020, 4:43 PM IST

ETV Bharat / state

'வேலை வேணுமா பணம் தாங்க' விழுப்புரத்தில் ரூ. 14 லட்சம் மோசடி!

விழுப்புரம்: வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 14 லட்சம் வரை மோசடி செய்த நபரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

மோசடி
மோசடி

சென்னை கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் குலாப்சிங் (52). இவர் தமிழ்நாடு கூட்டுறவு பால் தயாரிப்பாளர் நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்துவருவதாக கூறி, விழுப்புரத்தில் மோசடி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு விராட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த வினோத், மாலதி, அரவிந்த், செல்வம், மகேஷ், ஷாலினி ஆகியோர்களிடம் நான் பணியாற்றும் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தையில் மயக்கியுள்ளார். அவர்களிமிருந்து சுமார் ரூ. 14 லட்சம் வரை பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

இதையடுத்து,பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் விசாரணை தொடங்கிய காவல் துறையினர், நேற்று குலாப்சிங்கை கைது செய்தனர்.

இதையும் படிங்க:பயங்கரவாதிகள் 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ABOUT THE AUTHOR

...view details