தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Watch Video: தேவாலயத்திற்குள் சிக்கிக்கொண்டவர்கள் பாதுகாப்பாக மீட்பு - தீயணைப்புப் படையினர்

விழுப்புரத்தில் வெள்ளத்தின்போது தேவாலயத்திற்குள் சிக்கிக் கொண்டவர்களை 30க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் சேர்ந்து மீட்டுள்ளனர்.

watch video: தேவாலயத்திற்குள் சிக்கிக்கொண்டவர்கள் பாதுகாப்பாக மீட்பு
தேவாலயத்திற்குள் சிக்கிக்கொண்டவர்கள் பாதுகாப்பாக மீட்பு

By

Published : Nov 19, 2021, 11:03 PM IST

விழுப்புரம்: அரகண்டநல்லூர் அருகே உள்ள மணம்பூண்டி பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறான துரிஞ்சல் ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் கரையில் தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது.

நள்ளிரவில் வெள்ளத்தினால், இந்த தேவாலயத்தினுள் சிக்கிக்கொண்ட 4 பேரை மீட்பதற்காக 4 பேர் சென்றுள்ளனர். ஆனால், அவர்களை மீட்க முடியாமல் அனைவரும் தேவலாயத்திற்குள்ளேயே சிக்கிக்கொண்டனர்.

இதனையடுத்து, திருக்கோவிலூர் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் (rescue team) மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். எனினும் அவர்களை மீட்க முடியாத நிலை நீடித்தது.

தேவாலயத்திற்குள் சிக்கிக்கொண்டவர்கள் பாதுகாப்பாக மீட்பு

பின்னர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் பகுதியில் இருந்து வந்த 30க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் சுமார் 4 மணி நேரம் போராட்டத்திற்குப் பின் ஃபைபர் படகு மூலமாக தேவாலயத்தில் இருந்த 8 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

இதையும் படிங்க: வெங்கச்சேரி செய்யாறு தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு - போக்குவரத்து நிறுத்தம்

ABOUT THE AUTHOR

...view details