தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

144 தடை உத்தரவை மீறும் மக்கள் : ஒரே நாளில் 217 வழக்குகள் பதிவு

விழுப்புரம் : 144 தடை உத்தரவை மீறியதாக நேற்று ஒரே நாளில் 217 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் ஒரே நாளில் 217 வழக்குகள் பதிவு
விழுப்புரத்தில் ஒரே நாளில் 217 வழக்குகள் பதிவு

By

Published : Apr 28, 2020, 4:18 PM IST

கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் சூழலில், தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கும், தமிழ்நாடு அரசால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதற்காக நேற்று (ஏப்ரல் 27) மட்டும், 217 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரத்தில் ஒரே நாளில் 217 வழக்குகள் பதிவு

மேலும் 144 தடை உத்தரவை மீறியதற்காக கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் நேற்று வரை மாவட்டத்தில் மொத்தம் 6,494 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பாக மொத்தம் 6,590 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களிடமிருந்து 4,831 இருசக்கர வாகனங்கள், 89 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 93 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:அதிகரிக்கும் கரோனா தொற்று! பொதுமக்கள் அச்சம்

ABOUT THE AUTHOR

...view details