விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் கிராம நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 200க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 'நீராதாரத்தைப் பெருக்குவோம்' என்ற பெயரில் அந்தப் பகுதியில் உள்ள 180 குடும்பங்களுக்கு அரசு சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதைக் கண்டு பதறிப்போன இவர்கள் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரையைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "எங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த அரசாங்கமே, தற்போது எங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது வேடிக்கையாக உள்ளது. இங்குள்ள 200 குடும்பங்களும் நீர் ஆதாரத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில்தான் வாழ்கிறோம். அப்படி இருக்கும்போது இந்த நோட்டீசுக்கான காரணம் என்ன என்று புரியவில்லை.