இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் வருவாய்த்துறை சார்பில் இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், கைம்பெண்கள் ஓய்வூதிய திட்டம், கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், திருமணமாகாத பெண்கள் ஓய்வூதியத் திட்டம், உழவர் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டம், இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட எட்டு ஓய்வூதியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து வட்ட - மாவட்ட அளவில் வருவாய் துறை அலுவலர்கள் மூலம் நேரடியாக பெறப்பட்டு வந்தன. இந்நிலையில் ஓய்வூதிய திட்டங்களுக்கான விண்ணப்பங்களை இ-சேவை மையத்தின் வாயிலாக விண்ணப்பம் பெறுவதற்கான வசதிகளை செய்து தருமாறு தமிழ்நாடு மின்னாளுமை முகமையை, மாநில வருவாய்த் துறை கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, முதியோர், கைம்பெண்கள் உள்ளிட்ட எட்டு ஓய்வூதிய திட்டங்களுக்கு ஆன்-லைன் விண்ணப்பங்கள் உருவாக்கப்பட்டு அவை அந்தந்த மின் மாவட்ட இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.