விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொண்ணங்குப்பம் ஊராட்சியுடன் துத்திப்பட்டு கிராமம் இணைந்து உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கு உள்ளாட்சித் தேர்தல் ஏலம் முறையில் நடைபெற்றது.
தனி ஊராட்சியாக மாற்ற கோரிக்கை
பொண்ணங்குப்பம் ஊராட்சியில் ஆயிரத்து 400 வாக்குகள் உள்ளன. துத்திப்பட்டு கிராமத்தில் இரண்டாயிரத்து 400 வாக்குகள் உள்ளன. இதனால் தனிப்பெரும்பான்மையுடன் உள்ளாட்சித் தேர்தலில் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளைத் தொடர்ந்து துத்திப்பட்டு பகுதி மக்களே தலைவர், கவுன்சிலர்களைத் தேர்ந்தெடுத்துவருகின்றனர்.
இதனால் பொண்ணங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்களால் எவ்வித ஜனநாயக பதவிகளையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொன்னங்குப்பம் பகுதியைத் தனி ஊராட்சியாக மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாகச் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மனு அளித்துவந்துள்ளனர். மனு மீதான உரிய நடவடிக்கையை அலுவலர்கள் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.