தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழை வெள்ளத்தால் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்! - Rice Planatation Disaster

விழுப்புரம்: தொடர்ந்து பெய்துவந்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆறு, பம்பை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கி சேதமாகி உள்ளன.

விழுப்புரம்
விழுப்புரம்

By

Published : Dec 19, 2020, 8:41 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவந்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆறு, பம்பை ஆறுகளில் அதிக நீர்வரத்துடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கின.

விழுப்புரம் அடுத்த கானை பெரும்பாக்கம், சூரப்பட்டு, காங்கியனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் தண்ணீரில் மூழ்கி சேதமாகி உள்ளன.

மழை வெள்ளத்தால் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
இதனால் தை மாதம் அறுவடைக்காகக் காத்திருந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட வேளாண் துறை, பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைக் கணக்கெடுத்து தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details