விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வீராங்கன் மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு வந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்திலிருந்த கிராம ஊராட்சி செயலர்கள், பொதுமக்களை அலுவலகத்திற்குள்ளேயே வைத்து பூட்டிவைத்தனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வந்ததைத் கண்ட அலுவலர்கள் கையிலிருந்த பணத்தை அலுவலக ஜன்னல் வழியாக பின்புறம் தூக்கி வீசியுள்ளனர். இதனைப் பார்த்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அலுவலகம் பின்புறம் சென்று பணத்தை பறிமுதல் செய்தனர்.
லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரின் சோதனையில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 150 ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் திடீர் சோதனை இதையும் படிங்க: போலி டீ தூள் கம்பெனிக்கு சீல்!