தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிப்பு - விழுப்புரத்தில் சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழப்பு - Corona Damage Villupuram One dies

விழுப்புரம் : கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.

Corona Damage Villupuram One dies
Corona Damage Villupuram One dies

By

Published : Jul 6, 2020, 8:54 AM IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த முருங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 55 வயது நபர், அண்மையில் திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டு இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுள்ளார்.

தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட இவருக்கு கடந்த 28ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று (ஜூலை மூன்று) மாலை, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பலி எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.


இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details