விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி நள்ளிரவில் வடிவேல் நகர் பகுதியில் இயங்கி வந்த தனியார் கேஸ் அலுவலகத்தின் லாக்கரை உடைத்து அதில் இருந்த 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இது குறித்து கேஸ் அலுவலக உரிமையாளர் ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருக்கோவிலூர் போலீஸார், அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளில் தெரிந்த நபர் குறித்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து கொள்ளையில் ஈடுபட்டிருப்பது அந்த அலுவலகத்தில் எலக்ட்ரிசியனாக வேலை செய்து வந்தவர் என்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அந்த நபர் சந்தப்பேட்டை காலணி பகுதியைச் சேர்ந்த ரஹ்மான் என்பவரின் மகன் கரீம் (38) என்பது தெரியவந்தது. முதலில் குற்றத்தை ஒப்புக்கொள்ளாத அந்த நபர், பின்னர் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில், களவு போன பணத்தை மீட்டு, கரீமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கேஸ் அலுவலகத்தில் கொள்ளை - சிசிடிவி காட்சியால் சிக்கிய திருடன்