செங்கோட்டையிலிருந்து தனியார் ஆம்னி பேருந்து 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு (ஆக்.06) புறப்பட்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்ததை ராணிப்பேட்டை அரியூரை சேர்ந்த வேலாயுதம் (40) ஓட்டினார். மாற்று டிரைவராக சென்னை கொடுக்கூரை சேர்ந்த பாண்டியராஜன் இருந்தார்.
இந்நிலையில் இன்று (அக்.07) அதிகாலை 4.30 மணிக்கு மயிலம் அடுத்த கன்னிகாபுரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மயிலம் காவல் துறையினர் மற்றும் டோல்கேட் ரோந்து ஊழியர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து மயிலம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். குறைவான பயணிகளே பேருந்தில் இருந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:லஞ்ச வழக்கு! மின்வாரிய அலுவலர்களுக்கு சிறை