விழுப்புரம் அடுத்த பாணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (68). இவர் தனது ஆதார் அடையாள அட்டையினை புதுப்பிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு, பெருந்திட்ட வளாகம் முன்புள்ள நுழைவாயில் கால்நடைகள் நுழையாமல் இருப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பிகளுக்குள் முதியவரின் வலது கால் சிக்கியுள்ளது.
இரும்பு கம்பிக்குள் கால் சிக்கி தவித்த முதியவர்: ஜேசிபியைக் கொண்டு மீட்பு! - பெருந்திட்ட வளாகம்
விழுப்புரம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள பெருந்திட்ட வளாகத்தில், கால்நடைகள் நுழையாமல் இருப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பிக்குள் கால் சிக்கி தவித்து வந்த முதியவரை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு மீட்டனர்.
இதனால், நிலை தவறி கீழே விழுந்த முதியவர் தனது காலினை வெளியே எடுக்க முடியாமல் தவித்து வந்தார். இதையடுத்து பெருந்திட்ட நுழைவுவாயில் முன்பாக கூடியிருந்த பொதுமக்கள் முதியவரை மீட்க முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. இது குறித்து தகவலறிந்த மாவட்ட நிர்வாகம், ஜேசிபி இயந்திரத்தை கொண்டு முதியவரை 10 நிமிட போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர். பின்னர், அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: வால்பாறை அருகே கரடி கடித்ததில் முதியவர் படுகாயம்