மரக்காணம் அடுத்த முன்னூர் கிராமத்தில் வசித்து வருபவர் முத்துக்கண்ணு (85). இவர் அதே பகுதியில் உள்ள கிணற்றின் படிக்கட்டில் நின்று குளித்துக் கொண்டிருக்கும் போது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முத்துக்கண்ணு குடும்பத்தார்கள் அவரை காணவில்லை என்று பல்வேறு இடங்களில் தேடியும் காணாத நிலையில், நீலமேகன் என்பவருக்கு சொந்தமான கிணற்றின் அருகே முத்துக்கண்ணுவின் உடைகள் தென்பட்டன.
இதையடுத்து கிணற்றுக்குள் அவரை தேடினர். மேலும், இது தொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கிணற்றில் மூழ்கி, முத்துக்கண்ணுவை தேடினர்.
கிணற்றில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு சுமார் இரண்டு மணி நேர தேடலுக்கு பிறகு முத்துக்கண்ணுவின் உடல் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் உடற்கூராய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பிரம்மதேசம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பைக்கில் சென்ற செவிலியருக்கு அரிவாள் வெட்டு!