விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மீனம்பூர் கிராமத்திலுள்ள ஏரிக்கரையில், ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பை வருவாய்த்துறையினர் மீட்டனர். இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை மற்றும் துணை ஆட்சியர் அனு ஆகியோர் தலைமையில் பசுமை மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.
ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு மரம் நடும் விழா - வருவாய் துறையினர்
விழுப்புரம்: செஞ்சியில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு மரம் நடும் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை கலந்துகொண்டார்.
tree plantation event
மேலும், கிராமப் புறங்களிலுள்ள அரசு நிலங்களை மீட்டு அவ்விடங்களில் பலன் தரும் பழ வகைகள் கொண்ட மரக்கன்றுகள் நட்டு வைக்கப்படும்.
இந்த மரங்களின் பராமரிப்பு பணிகளை வட்டார வளர்ச்சி அதுவலகத்தின் மூலம் மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி பராமரிக்க ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.