தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்! - விழுப்புரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்

விழுப்புரம்: இருபது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் நடத்திய சாலை மறியல்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் நடத்திய சாலை மறியல்

By

Published : Nov 27, 2019, 10:11 PM IST

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இருபது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

அவர்களது கோரிக்கையானது; வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடையாக குறைந்தபட்சம் ஐந்து லட்சம் ரூபாய் வரை வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், மாணவர்களுக்கு உணவு ஊட்டும் செலவினம் உயர்த்தி வழங்க வேண்டும்.

எரிவாயு உருளையை அரசே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட இருபது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரின் கவன ஈர்ப்புக்காக சாலை மறியலில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் நடத்திய சாலை மறியல்

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details