தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்ட திருத்தங்களை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு - Vilupuram district news

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 5-இல் நீதிமன்றங்கள் முன்பு மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அச்சங்கத்தின் மாநில செயல் தலைவர் ஏ.கோதண்டம் தெரிவித்துள்ளார்.

சட்ட திருத்தங்களை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
சட்ட திருத்தங்களை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

By

Published : Aug 4, 2020, 5:06 AM IST

இது தொடர்பாக விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய அரசு இந்த கரோனா காலத்தில் அவசர அவசரமாக பல சட்ட திருத்தங்களை செய்கிறது. இதனை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. சட்ட திருத்தம் செய்ய குழு அமைத்து உள்ளது, இந்த குழு தகுதியற்றது.22ஆவது சட்ட கமிஷன் உள்ள நிலையில் இந்த குழு தேவையற்றது.

மின்சாரம், சுற்றுசூழல், தொழிலாளர் உள்ளிட்ட பல்வேறு சட்ட திருத்தங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். நீதிமன்ற நீதிபதிகள், பணியாளர்கள் நீதிமன்றத்தில் பணியாற்றும் போது தகுந்த பாதுகாப்புடன் வழக்கறிஞர்களை அனுமதிக்க வேண்டும்.

வாழ்வாதாரம் இழந்துள்ள வழக்கறிஞர்களுக்கு உதவிட தமிழ்நாடு அரசு 50 கோடி ரூபாய் பார் கவுன்சிலுக்கு நிதி வழங்க வேண்டும். கர்நாடகம், புதுச்சேரி போல் தகுதியான வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 லட்சம் வரை வங்கிகளில் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.

போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆகஸட் 5-இல் நீதிமன்றங்கள் முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details