தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உணவுக்குக்கூட வழியின்றித் தவிக்கின்றோம்' - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் - northside workers protest against lockdown

விழுப்புரம்: தங்களின் சொந்த ஊர் திரும்ப அனுமதி கேட்டு 50-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

northside
northside

By

Published : May 3, 2020, 10:16 AM IST

கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்துவிதமான போக்குவரத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் விழுப்புரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாய், போர்வை உள்ளிட்டவைகளை விற்பனை செய்வதற்காக வந்திருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர், அவர்களின் சொந்த ஊர் திரும்ப அனுமதிகேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது முகத்திரை அணிந்துகொண்டு சாலையில் வரிசையாக அமர்ந்த அவர்கள், ”கையிலிருந்த பணம் முழுவதும் செலவாகிவிட்டதால், உணவுக்குக்கூட வழியின்றித் தவிக்கின்றோம்” என வேதனையுடன் தெரிவித்தனர்.

வடமாநிலத் தொழிலாளர்கள்

அவர்களின் குறைகளைக் கேட்டுக்கொண்ட அலுவலர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்ப விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரையில் தேவையான உணவுப் பொருள்களை வழங்குவதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து அமைதியாகக் கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க:மகாராஷ்டிரா டூ பிகார் : 22 நாள்கள் நடந்தே பயணித்து சொந்த ஊரை சென்றடைந்த கூலித்தொழிலாளி!

ABOUT THE AUTHOR

...view details