விழுப்புரம்:சந்திரனில் காலடி தடம் பதித்த நான்காவது நாடு மற்றும் தென் துருவத்தில் முதலாவதாக காலடி பதித்த நாடு இந்தியா என்கிற பெருமையுடன் சந்திராயன் மூன்று (chandraayan 3) விண்கலம் தற்போது நிலவில் தன்னுடைய ஆராய்ச்சி பணிகளை திறம்பட செய்து வருகிறது.
நேற்றைய தினம் (ஆகஸ்ட். 29) கந்தகம், இரும்பு, மற்றும் ஆக்சிஜன் போன்ற தனிமங்கள் இருப்பதனை தன்னுடைய ஆராய்ச்சி மூலமாக உலக விஞ்ஞானிகளுக்கு தெரிவித்த சந்திராயன் 3 ரோவர் கருவிக்கு உலகம் முழுவதும் இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க விஞ்ஞான ஆராய்ச்சிக்கு இந்தியாவின் இப்போதைய ஆராய்ச்சி நிலையத்தில் சந்திராயன் 3 வெற்றிக்கு முதன்மை மூளையாக செயல்பட்டவர் திட்ட இயக்குனர் விழுப்புரத்தில் சேர்ந்து பி வீர முத்துவேல். அவர்களுக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மற்றும் சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் இந்திய மற்றும் சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அவருடைய தந்தையான பழனிவேலை நேரில் சந்தித்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் திரு.வி.கா பகுதியில் வசித்து வரும் பழனிவேலை இன்று (ஆகஸ்ட். 30) நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்ய நாராயனண் ராவ் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்